Wednesday, December 23, 2009

முந்திரிப் பருப்பு தொக்கு

இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். இதனுடன் அனைத்து சாத வகைகளையும் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

கடுகு – 1ஸ்பூன்

கறிவேப்பிலை – 1கொத்து

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

முந்திரி – 2கப்

தேங்காய் பால் – 1கப்

கொத்தமல்லி தழை – 1/4கப்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:-

கசகசா – 2ஸ்பூன்

தனியா – 4ஸ்பூன்

பட்டை,கிராம்பு – 5நம்பர்

காய்ந்த மிளகாய் – 5நம்பர்

இஞ்சி – 1ஸ்பூன்

பூண்டு – 2ஸ்பூன்

வெங்காயம் – 1ஸ்பூன்

முந்திரி – 4ஸ்பூன்

தேங்காய் – 1கப் துருவியது

மஞ்சள் தூள் – 1/2ஸ்பூன்

செய்முறை:-

அரைக்க வேண்டிய பொருள்களில் முதலில் கசகசா, தனியா எண்ணெய்யில்லாம் வறுக்கவும். அதனுடன் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸியில் இக்கலவையுடன் தேங்காய் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 5ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகை சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கியதும் தக்காளி, முந்திரி சேர்த்து வதக்கவும்.

பின்பு அதனுடன் தேங்காய் பாலையும் அரைத்த கலவையும் தேவையான உப்பையும் சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மேலாக கொத்தமல்லி தழைகளை தூவவும்.

சுவையான முந்திரிப் பருப்பு தொக்கு தயார்.

No comments:

Post a Comment