Wednesday, December 23, 2009

மீன் குழம்பு

இது மிகவும் சுவையாக இருக்கும். மீன் குழம்பு எல்லோருக்கும் செய்ய தெரியும். ஆனால் நான் இந்த விதத்தில் செய்வேன். இதையும் என் அன்பு அம்மாதான் கற்றுக்கொடுத்தார்கள். இதை அனைத்துவகை சாதத்துடனும், காலை வேலை உணவுகளுடனும் சேர்த்து உண்ணலாம். நீங்களும் செய்துபாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

ஏதாவது மீன் வகை (சிறிய மீன்) – 1/4கிலோ [ நகரை மீன், காரா மீன், வஞ்சர மீன், பாம்லெட் மீன், கிழங்கை மீன்]

தேங்காய் துருவல் – 1/4கப்

சின்ன வெங்காயம் – 1/2 கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1/4கப்

பச்சைமிளகாய் – 2நம்பர் 2ஆக கீறியது

வெந்தயம் – 1/4ஸ்பூன்

மஞ்சரங்காத்தூள் (மஞ்சள், சோம்பு, சீரகம் ஆகியவற்றை அரைத்த பொடி) – 2ஸ்பூன்

மிளகாய் தூள் – 1ஸ்பூன்

தனியாத்தூள் – 3ஸ்பூன்

புளித்தண்ணீர் – 1/2கப்

கறிவேப்பிலை – 1கொத்து

சோம்பு – 1ஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :-

  • முதலில் மீனை நன்கு மண்சட்டியில் சிறிது கல் உப்பு சேர்த்து நன்கு உரசி 4 அல்லது 5 தடவை நன்கு அலசி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • மிக்ஸி ஜாரில் தேங்காய், சிறிது வெங்காயம் சேர்த்து நன்கு மைபோல் அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் மஞ்சரங்காத்தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் தாளிக்காமல் மீன், அரைத்த மசாலா, புளித்தண்ணீர், உப்பு , பச்சைமிளகாய், தக்காளி, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து 1/4மணி நேரம் கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்.
  • தனியே வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் வரும் வரை வதக்கி கொதித்து இறக்கிய குழம்புடன் சேர்த்து கலக்கி மூடி வைக்கவும்.
  • தேவையான போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான மீன் குழம்பு தயார்.

No comments:

Post a Comment