Wednesday, December 23, 2009

பருப்பு உருண்டை குழம்பு

இது மிகவும் சுவையாக இருக்கும். எளிதிலும் செய்து விடலாம். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

துவரம் பருப்பு – 1/4 கப்

கடலைப்பருப்பு – 1/4 கப்

பாசிப்பருப்பு – 1/4 கப்

தேங்காய் துருவல் – 1/2கப்

சோம்பு – 2ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய் – 3நம்பர் பொடியாக நறுக்கியது

இஞ்சி, பூண்டு விழுது – 2ஸ்பூன்

கொத்தமல்லி தழை – 1/2கப்

கருவேப்பிலை – 1கொத்து

சாம்பார் தூள் – 2ஸ்பூன்

புளித்தண்ணீர் – 1/2 கப்

பெருங்காய்த் தூள் – 1/4ஸ்பூன்

கசகசா – 1ஸ்பூன்

வெந்தயம் – 1ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்னீர் – தேவையான அளவு

செய்முறை:-

  • பருப்பு வகைகளை 1மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சோம்பை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அதனை பாத்திரத்தில் எடுத்து அதனுடன் சிறிது வெங்காயம், சிறிது பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லிதழை , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வடை பதத்தற்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி இட்லி தட்டில் கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து தனியே எடுத்துக் கொள்ளவும். ( உருட்டிய உருண்டைகளை எண்ணெய்யிலும் பொரித்துக் கொள்ளலாம்.)
  • தேங்காய், வெங்காயம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் மைபோல் அரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம்,பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுக்கவும். நன்கு வறுத்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • நன்கு வதக்கியவுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் புளித்தண்ணீர், சாம்பார் தூள், அரைத்த மசாலா, சிறிது தண்ணீர் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த வுடன் வெந்த உருண்டைகளை அதில் சேர்த்து 1கொதி வந்தவுடன் கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

இந்த குழம்பில் உருண்டைகளாக போடாமல் உதிர்த்து விட்டு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான வடைக்கறி ரெடி.

No comments:

Post a Comment