இட்லி எல்லோருக்கும் செய்ய தெரியும். ஆனால் இந்த முறையில் எளிதாக செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள் :-
இட்லி அரிசி – கால்படி உலக்கு (2) அறைக்கா படி உலக்கு (2)
உளுந்து – வீசம்படி உலக்கு (2)
துவரம் பருப்பு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
- முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவி ஊறவிடவும். வேற பாத்திரத்தில் உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை கழுவி ஊற விடவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊறினால் எளிதில் அரைக்கும்.
- க்ரைண்டரில் உளுந்து போட்டு தேவையான தண்ணீர் விட்டு 1/2மணி நேரம் அரைக்கவும். பின்பு அதனுடன் அரிசியையும் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
- நன்கு அரைத்ததும் க்ரைண்டர் ஓடும் போதே உப்பையும் சேர்த்து 5 நிமிடம் ஒட விடவும். (கையை பிசைவதற்கு பதிலாக)
- பின்பு க்ரைண்டரை அமத்தி அரைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி வைத்து மூடி வைக்கவும். குறைந்தது 7மணி நேரம் இருந்தால் தான் இட்லி நன்றாக இருக்கும்.
- அப்புறம் என்ன காலையில் இட்லி குக்கரில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து தேவையான சட்னியை செய்து சாப்பிடுங்கள்.
- தோசை வேண்டுமா இட்லி மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி தோசைக்கல்லில் தோசை ஊற்றுங்கள். அவ்வளவு மிருதுவாகவும் மொறுமொறுப்பாகவும் வரும்.
No comments:
Post a Comment