Wednesday, December 23, 2009

எலும்பு சூப்

தேவையானப் பொருட்கள்:
ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
தக்காளி- 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2
அரைக்க:- இஞ்சி – 10 கிராம் ,பூண்டு – 10 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்), மிளகு தூள் – 2 டீஸ்பூன், சீரகதூள் – 2 டீஸ்பூன், தனியாதூள் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை – 1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்) ,நெய் – 50 கிராம் ,ரொட்டித்தூள்- சிறிதளவு, எலுமிச்சம்பழம் – 1/2 (சாறு எடுக்கவும்), சர்க்கரை – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி சேர்த்து சூப்பை இறக்கவும். பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். (கார்ன் மாவும் உபயோகிக்கலாம்) பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்.

No comments:

Post a Comment