Wednesday, December 23, 2009

பொருத்தமான மேக்கப்

கூந்தல்:

* பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.

* முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.

குட்டை முடி:

* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். * அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.

* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.

நீளமான முடி:

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.

* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

* சதுர முகம்: தளர ( காதை மூடிய பின்னல் ) , கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். * குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.

* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

* எல்லோருமே கொண்டைவலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

பொட்டு:

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு தே நிறத்திவ் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய நீட்டப் பொட்டு சூப்பராக இருக்கும்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுகள் பொருந்தும்.

* நீளமுகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுகள் வைக்கலாம்.

* ஜீன்ஸ் அணிந்தால் கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுகள் எடுப்பாக இருக்கும்.

பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்க பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்கினால் முக அழகு கூடும். அதற்கான அசத்தல் ஐடியா,

இதோ! முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை, சோளமாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கிடைக்கும் கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் பூசிக்கொள்ள வேண்டும். கலவை காய்ந்தபின் அதனை பதமாக நீக்க வேண்டும். அப்போது கலவையுடன் சேர்ந்து ரோமங்களும் உதிர்ந்துவிடும். தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை இப்படியே செய்துவந்தால் ரோமங்கள் இல்லாமல் சவழவழ முக அமைப்பை பெறலாம். நகத்துக்குச் சாயம்

நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும் உடைந்தும் தொல்லை தரும். நடுவில் பிரிந்து அல்லது அரைகுரையாக உடைந்து மூளியாகக் காட்சியளிக்கும் நகம் விரலின் அழகையே கெடுத்துவிடும்.

எனவே அதிகமாக நகம் வளர்க்காதீர்கள். நகம் வெட்டியை பயன்படுத்தி குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை வெட்டிவிடுங்கள். நகத்தை நீக்குவதற்கு பல்லால் கடிப்பதை தவிர்க்கவும். அது அசிங்கமான பழக்கம் என்பதை விட தேக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.

மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும்.
அப்போது அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய “டிசைன்களை” மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும்.

பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன்மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு.

மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு. சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

பொதுவாக இவ்வகை இயற்கை நிறப்பூச்சைப் பயன்படுத்தி நகங்களுக்கு பொலிவுபண்ணுவது ஆடம்பரமற்ற அமைதியான அழகை தரும்.

ஒவ்வொரு தடவையும் நகப்பூச்சை பயன்படுத்தும் போதும் பழைய பூச்சை அகற்றிவிடுவது மிகமிக அவசியம். காய்ந்த பழைய பூச்சை எடுத்துவிட கத்தியைக் கொண்டோ அல்லது வேறு ஏதும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ நகத்தை சுரண்டுவது நல்லதல்ல.

அதற்குறிய “பாலிஸ் ரிமூவரையே” பயன்படுத்த வேண்டும். பழைய பூச்சைக் களைந்து விரல்களை நன்கு சுத்தப்படுத்திப் பின்னர் திரும்பவும் பூசவும்.

கைகளுக்கு பயன்படும் இந்த பூச்சுகளே பாதங்களுக்கும் பயன்படக்கூடியவை.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

வீட்டுல் அணியும் உடைகள் பெண்கள் வீட்டில் இருக்கும் போது உடை அணியும் விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இல்லை என சில பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறான மனோபாவமாகும். வீட்டில் இருப்பவர்கள் நம்மை சார்ந்தவர்களாகவே இருப்பினும் வீட்டுச் சுழ்நிலைக்கு ஏற்ப உடை அணிவது வீட்டில் உள்ள ஆண்களுக்கு நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது பகட்டாக உடை அணிவது தேவையில்லை என்றாலும் வீட்டிற்கு ஏற்ற மாதிரி பாந்தமாக உடை அணிவது அவசியமே.

அதிக உடையும் குறைந்த உடையும்

பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது.

கடைத் தெருவுக்குப் போகும்போது

கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறம் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சுழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள்

பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை

அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சுழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

ஒல்லியான பெண்களுக்கு உடைகள்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.

புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.
உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமைபார்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயராமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment