Wednesday, December 23, 2009

கத்திரிக்காய் தொக்கு

இந்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும். இதனை அனைத்து வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதை நானே நேற்று செய்து பார்த்தேன். நல்லாயிருந்தால் உங்களுக்கும் சொல்லுகிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

கத்திரிக்காய் – 1/4கிலோ பொடியாக நறுக்கியது

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன் பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி தழை – 1/4கப் பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – 1கொத்து

சாம்பார் பொடி – 2ஸ்பூன்

சோம்பு – 1ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/4ஸ்பூன்

புளித்தண்ணீர் – 1/4கப்

தண்ணீர் – 1கப்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கத்திரிக்காயையும் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் புளித்தண்ணீர், தண்ணீர் , சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு சுண்ட வரும் வரை கொதிக்க விடவும்.
  • நன்கு சுண்டி வந்தவுடன் கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்.
  • தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.

No comments:

Post a Comment