Wednesday, December 23, 2009

பூரி

இந்த பூரி ருசியாகவும் முறுமுறுப்பாகவும் இருக்கும். எளிதிலும் செய்து விடலாம். ஆறினாலும் நன்றாக இருக்கும். இதற்கு பூரி மசாலா சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

மைதாமாவு அல்லது கோதுமை மாவு – 3 கப்

சோளமாவு – 1/4கப்

காய வைத்த பால் – தேவையான அளவு

ரவை – 5ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் வாய் அகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, ரவை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • தண்ணீருக்கு பதிலாக காய வைத்த பாலை அதில் தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை 1மணிநேரம் ஊற விடவும்.
  • பின்பு ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திகல்லில் சிறிது மைதா மாவை தூவி மாவையை வைத்து மிகவும் லேசாகவும் கனமாகவும் இல்லாமல் நடுத்தரமாக தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை குறைந்த தணலில் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான பூரி தயார்.

No comments:

Post a Comment