சாயங்கால நேரங்களில் விதவிதமாய் பஜ்ஜி செய்து வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து அவரின் பாராட்டைப் பெறுங்கள் ஓ.கே வா!
பஜ்ஜி மாவு:-
கடலை மாவு – 1கப்
அரிசி மாவு – 1/2 கப்
பெருங்காயத்தூள் – 1ஸ்பூன்
சோளமாவு – 1/4கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2ஸ்பூன்
பஜ்ஜி கலர் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
மேலே உள்ள எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜிமாவு பதத்தற்கு கரைத்துக் கொள்ளவும்.
பஜ்ஜி வகைகள்:-
- வாழைக்காய் – முதலில் வாழைக்காயை தோல் சீவி மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- உருளைக்கிழங்கு – தோலை சீவி மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- மில் மேக்கர் – மில் மேக்கரை 1மணி நேரம் ஊற வைத்த பிறகு பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- ஆப்பிள் – மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- காலிஃபிளவர் – காலிஃபிளவரை சூடு நீரிலில் சிறிது நேரம் வேகவைத்து தனியே எடுத்து பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- பிஞ்சு சோளம் – பிஞ்சு சோளத்தை இரண்டு பாகமாக வெட்டி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- காளான் – காளானை மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- முட்டை – முட்டையை வேகவைத்து மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
- பிரெட் – பிரெட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
No comments:
Post a Comment